புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இந்தியாவில் காதல் தோல்வியால் விரக்தியடைந்த கல்லூரி மாணவர், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாதவரத்தில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாதவரம் பொன்னியம்மன்மேடு பகுதியை சேர்ந்தவர்
மனோகரன். தனியார் கம்பெனியில் வேலை பார்க்கிறார். இவரது மகன் யோகராஜ் (18), மாதவரம் பால்பண்ணையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி., முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று மாலை கல்லூரியில் இருந்து வீட்டுக்கு வந்தார்.

அவரது பெற்றோர், வேலை விஷயமாக வெளியே சென்றிருந்தனர். தனியாக இருந்த யோகராஜ், திடீரென அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலை முடிந்து இரவு வீடு திரும்பிய பெற்றோர், யோகராஜின் அறை பூட்டியிருந்ததால் கதவை தட்டினர். நீண்ட நேரம் தட்டியும் திறக்கவில்லை. ஜன்னல் வழியாக பார்த்தபோது மின்விசிறியில் யோகராஜ் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்து கதறினர்.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்தனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் மாதவரம் பால்பண்ணை போலீஸ் இன்ஸ்பெக்டர் காசியப்பன் மற்றும் போலீசார் வந்து, கதவை உடைத்து சடலத்தை இறக்கினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுதொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். காதல் தோல்வியால் யோகராஜ் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது


0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top