புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


டொரொண்ட்டோவில் தனது ஓர் அறையில் தீப்பிடித்ததைப் பார்த்ததும் நிக்கோலஸ் டி ஷேன் என்ற 12 வயது சிறுவன் தன் தந்தையிடம் தெரிவித்து விட்டு உள்ளே ஓடினான்.6 வயதான தன் தம்பி வின்செண்ட்டைத் தூக்கிக் கொண்டு வெளியே
வந்தான்.

திரும்பவும் உள்ளே ஓடிப்போய் தன் அருமை நாய் சிம்பாவைக் காப்பாற்ற ஓடினான். ஆனால் புகை அதிகமானதால் உள்ளே நுழைய முடியவில்லை.

அவனது தந்தை, தங்கை ஏஞ்சலினாவை (வயது 4) ஒரு கையிலும் செல்சியாவை (வயது 3) மறுகையிலும் தூக்கிக் கொண்டு வந்தார்.

டொரொண்ட்டோவின் தீயணைப்புப் படைவீரர்கள் சங்கமும் டிஷேனைப் பாராட்டி மகிழ்ந்தது. அவனது குடும்பத்துக்கு 500 டொலர் காசோலை வழங்கப்பட்டது.


ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு பை நிறைய பொம்மைகள் வழங்கப்பட்டன. டிஷேனை உண்மையான வீரன் என்று காவல்துறை அதிகாரி பாராட்டிப் பேசினார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top