உத்தர பிரதேச மாநிலம் மீரட் நகரில் 23 வயது மகளை கொலை செய்ததாக பொறியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆண் குழந்தை இல்லாததால் விரக்தியில் இருந்த அந்த பொறியாளர், மகளை தண்ணீர் தொட்டியில் அமுக்கி கொலை செய்ய முயன்றுள்ளார். அவர் சாகவில்லை.
இதையடுத்து கழுத்தை நெரித்துள்ளார். மயங்கி விழுந்த மகளை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார். ஆனால் வழியிலேயே அவர் இறந்துவிட்டார். இதையடுத்து அவரது தந்தை மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றுவிட்டார்.
இதுபற்றி அந்த பெண்ணின் தாய் போலீசில் புகார் அளித்தார். அதில், தனது சாவுக்கு தானே காரணம் என்று மகளிடம் கடிதம் எழுதி வாங்கிவிட்டு, அவளை கொலை செய்ததாக கணவன் மீது குற்றம் சாட்டியிருந்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிந்து பொறியாளரை கைது செய்தனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக