ஜேர்மன் போக்குவரத்துப் பொலிசாரின் காரில் 1000 கி.மீ தனியாகப் பயணம் செய்த 13 வயதுச் சிறுவனை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
அவன் தன் உடன்பிறந்த தங்கையைப் பார்க்கும் ஆவலில் தன்னைத் தத்தெடுத்த தந்தையின் மெர்சிடிஸ் காரை எடுத்துக்கொண்டு போலந்துக்கு வந்துகொண்டிருப்பது தெரியவந்தது.
போலந்துக்கு 200 கி.மீ. தொலைவில் அவனைத் தடுத்து நிறுத்திய பொலிசார் அவன் பெற்றோருக்குத் தகவலளித்தனர்.
இது குறித்து இத்தாலியின் காவலதிகாரி எலியோனாரா ஸ்படாட்டி கூறுகையில், இந்த சிறுவன் அவன் இரண்டு நாடுகளின் எல்லைகளைக் கடந்த காரை ஓட்டி வந்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது என்றார்.
மேலும் இவன் தன் தாயகத்தையும் தங்கையின் அன்பையும் நேசித்ததால் இங்கு வர ஆசைப்பட்டு இருக்கிறான். கையில் வெறும் 200 யூரோவும் கடவுச்சீட்டும் எடுத்துக்கொண்டு வந்திருக்கிறான்.
அவனிடமிருந்த அலைபேசியை அவன் பெற்றோர் பறித்துக் கொண்டதால் அவனால் தன் தங்கையிடம் பேசவும் முடியவில்லை. எனவே தான் நேரில் பார்க்க காரில் புறப்பட்டு வந்திருக்கிறான் என்றார்.
அவன் ஞாயிறன்று இத்தாலிக்குத் திரும்பியதும் அவனது தத்துப்பெற்றோர் சமூகநலப் பணியாளரால் இன்னும் கூடுதலாக கண்காணிக்கப்படுவர் எனவும் கூறியுள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக