பிறந்தநாளன்று பீர் குடிப்பதற்காக 94 வயது முதியவர் மருத்துவமனையை விட்டு வெளியேறியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜேர்மனியின் மூனிச் நகரில் 94 வயது மதிக்கத்தக்க
முதியவர் ஒருவர் சிகிச்சை பெற்று வந்தார்.
அப்போது அவரது பிறந்தநாள் வந்ததால், கொண்டாட முடியவில்லை, இதனையடுத்து யாரிடமும் சொல்லாமல் மருத்துவமனையை விட்டு வெளியேறினார்.
பாதாள ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது, முதியவரின் கையில் ஊசி போட்டதற்கான அடையாளமும், சற்று மயங்கிய நிலையிலும் இருந்ததை பார்த்த நபரொருவர் ரயில்வே அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தார்.
உடனே அவர்கள் பொலிசாரிடம் தகவல் தெரிவிக்கவே, முதியவரை குறித்த மருத்துவமனையில் மீண்டும் அனுமதித்தனர்.
இதனையடுத்து மருத்துவர்கள் பீர் குடிக்க சம்மதம் தெரிவித்ததால், முதியவரும் பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்.
0 கருத்து:
கருத்துரையிடுக