உத்தர பிரதேசத்தில் மனைவியை அடித்து உதைத்து கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் தள்ளிய கணவனை போலீசார் கைது செய்தனர்.
உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர் விபேஷ் குமார். ஏர்லைன்ஸ் நிறுவனம் ஒன்றில் பாதுகாவலராக பணியாற்றுகிறார். அவர் தனது மனைவியை ஆபாசப் படம் எடுத்து வைத்துள்ளார். பின்னர் கட்டிய மனைவியையே விபச்சாரத்தில் ஈடுபடுமாறு வற்புறுத்தியுள்ளார். அதற்கு அவர் மறுக்கவே, நீ விபச்சாரம் செய்து பணம் சம்பாதிக்காவிட்டால் ஆபாசப் படங்களை வெளியிடுவேன் என்று விபேஷ் மிரட்டியுள்ளார். மேலும் தனது மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார்.
அவரை கட்டாயப்படுத்தி தனது நண்பர்கள் மற்றும் சிலருக்கு விருந்தாக்கியுள்ளார். இதையடுத்து அந்த பெண் போலீசில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் விபேஷை கைது செய்தனர்.
விபேஷ் தம்பதிக்கு 4 மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்து:
கருத்துரையிடுக