புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


உலக நாடுகளின் பல பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வரும் இச்சூழலில், அவுஸ்திரேலியாவில் மட்டும் வெப்பம் அதிகரித்துள்ளது.

குறிப்பாக அவுஸ்திரேலியாவின் தாஸ்மேனியா மாநிலத்தில் காடுகள் தீப்பற்றி எரிகின்றன.

இந்த காட்டுத்தீயால் 100க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் எரிந்து நாசமாகி உள்ளதுடன் அப்பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட மக்களை காணவில்லை என்றும் இவர்கள் தீயில் கருகி இறந்திருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.

இந்நிலையில் பல பகுதிகளில் தீ பரவுவதற்காகன வாய்ப்புகள் அதிகமிருப்பதால் தீயணைப்பு வீரர்கள் தொடர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலியா பிரதமர் ஜுலியா கில்லார்ட், பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டதுடன் விழிப்புடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டுமென மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

அத்துடன் நாட்டின் வனப் பகுதிகளுக்கு சுற்றுலா செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top