சீனாவில் மலைக்கிராமத்தில் ஏற்பட்ட மிக மோசமான நிலச்சரிவுக்கு கிராமமே மண்ணுக்குள் புதைந்தது.சீனாவின் தென்மேற்கில் யுன்னான் என்ற மலைப்பிரதேசம் அமைந்துள்ளது. இங்கு கடுமையான மழை பெய்து வருவதால், திடீரென
சேறு சகதிகளுடன் மண்சரிவு ஏற்பட்டது.
இதனால் மலைக் கிராமமே அடியோடு அடித்து செல்லப்பட்டு மூழ்கிப்போனது. இதில் கிராமத்தில் இருந்த குழந்தைகள், முதியவர்கள் உட்பட அனைவரும் சேறு சகதிக்குள் சிக்கி கொண்டனர்.
மண் தோண்டும் நவீன எந்திரங்களுடன் 1000 மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்தனர்.
இதில் இறந்துபோன 42 பேரின் உடல்களை மீட்புப்படையினர் வெளியே எடுத்தனர், பலர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
மேலும் 40-க்கும் மேற்பட்டோர் இந்த சகதிக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்புப்பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இனிவரும் வாரங்களில் மேலும் கடுமையான மழையும் பனிப்பொழிவும் இருக்கும் எனவும், மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக