பொதுவாக பண்டிகை என்றாலே அனைத்து வீடுகளும் மிகவும் சுத்தமாக இருக்கும். ஏனெனில் மற்ற நேரங்களில் வீட்டை சுத்தம் செய்கிறோமோ இல்லையோ, பண்டிகை நாட்களில் நிச்சயம் செய்வோம். அதிலும் உழவர் திருநாள், தமிழர் திருநாள் என்றழைக்கப்படும் பொங்கல்
பண்டிகையன்று, அனைத்து தமிழர்களும் கண்டிப்பாக செய்வார்கள். ஏனெனில் பொங்கல் பண்டிகைக்கு முதள் நாள் வரும் போகியன்று அனைத்து பழைய பொட்களையும் வெளியேற்றிவிட்டு, பொங்கலன்று புதிய பொருட்களைப் பயன்படுத்துவார்கள். அதுமட்டுமின்றி, நமது முன்னோர்கள் இவ்வாறு பொட்களை எரிக்கும் போது, நமது மனதில் இருக்கும் அனைத்து தீய எண்ணங்களும் எரித்துவிட்டு, பொங்கல் முதல் நல்ல எண்ணங்களை நினைக்க வேண்டும் என்று சொல்வார்கள்.
மேலும் பொங்கல் பண்டிகை வருவதால், அந்த நாளன்று தேவைப்படும் பொருட்களை முன்னரே வாங்கிக் கொண்டு, எந்த மாதிரியான அலங்காரம் எல்லாம் வீட்டில் செய்ய வேண்டும் என்று ஒருசிலவற்றை உங்களுக்காக பட்டியலிட்டுள்ளோம். இப்போது அந்த செயல்கள் மற்றும் பொருட்களை மனதில் கொண்டு, பொங்கலுக்கு வீட்டை அழகாக அலங்கரித்து, பொங்கல் பண்டிகையை சந்தோஷமாக கொண்டாடி மகிழுங்கள்.
சுத்தம் செய்வது எந்த பண்டிகையானாலும் முதலில் வீட்டை சுத்தம் செய்வோம். அதிலும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையன்று செய்யாமலா இருப்போம். அதுவும் கிராமங்களில் மாட்டுச் சாணத்தை நீரில் கரைத்து, வீட்டைத் துடைப்பார்கள்.
பொங்கல் காப்பு
பெரும்பாலும் பொங்கலுக்கு அனைத்து வீடுகளிலும் காப்புகளை கட்டுவார்கள். அந்த காப்பில் வேப்பிலை, ஆவாரம் பூ, பூலப் பூ ஆகியவற்றை சேர்த்து கட்ட வேண்டும்.
மாக்கோலம்
வீட்டில் உள்ளே ஹாலின் மையப் பகுதியில், அரிசி மாவினால் கோலம் போட்டு, காவி நிறத்தை சுற்றி கொடுப்போம். இதனால் வீடே மிகவும் அழகாக காணப்படும்.
செங்கல் மற்றும் விறகு
கிராமப் பகுதிகளில் பொங்கல் வைப்பதற்கு சிறிய பாறைக் கற்கள் அல்லது செங்கல் மற்றும் விறகுகளை சேகரித்து வைப்பார்கள். எனவே விறகு அடுப்பில் பொங்கல் வைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், இந்த பொருட்களை மறக்காமல் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
ரங்கோலி
சிலர் வீட்டிற்கு வெளியே போடும் கோலங்களில் பொங்கல் பொங்குவது போன்ற ரங்கோலியைப் போட்டு, அதன் உள்ளே சரியான நிறங்களால் நிரப்புவார்கள்.
வண்ணமயமான பானை
பொங்கல் வைப்பதற்கு மண் பானை மிகவும் முக்கியம். எனவே சிலர் வண்ணம் தீட்டப்பட்ட மண் பானையை வாங்கி வைப்பார்கள்.
மஞ்சள் கொத்து
பொங்கல் வைத்து சாமி கும்பிடும் போது மஞ்சள் கொத்து மிகவும் முக்கியம். ஆகவே மஞ்சள் கொத்துக்களை வாங்க வேண்டும்.
கரும்பு
என்னப்பா, முக்கியமான கரும்பை மறந்துவிட்டோம். அனைத்தையும் செய்துவிட்டு, டிவியில் நிகழ்ச்சி போடுகிறார்கள் என்று, கரும்பு வாங்குவதை மறந்துவிட வேண்டாம்.
0 கருத்து:
கருத்துரையிடுக