பக்கவாத நோய் தாக்கி நடக்க முடியாமல் போனவர்கள் மீண்டும் நடப்பதற்கு உதவும் மாத்திரையை கண்டுபிடித்ததாக விஞ்ஞானிகள் கோரியுள்ளனர். கலிபோர்னியா, ஸ்டான்போர்டு பல்கலைக் கழக பேராசிரியர் பிராங்க் லாங்கோ, பரிசோதனை முயற்சியாக கண்டுபிடித்த இந்த
மாத்திரையின் பெயர் LM11A-31. முதலில் எலிகளுக்கு கொடுத்து பரிசோதனை நடத்தியதில் சோதனை வெற்றிகண்டதாக அவர் கூறியுள்ளார்.
காயமடைந்து 4 மணிநேரம் கழித்து கொடுக்கத் தொடங்கி 42 நாட்களுக்கு தினமும் இரண்டு வேளை மேற்கூறிய மாத்திரைய்க் கொடுத்து சோதனை நடத்தப்பட்டுள்ளது.
பரிசோதனையின் போது வலி குறைந்ததோடு பக்க விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை என்று ஆய்வு கூறுகிறது.
முதுகுத் தண்டில் காயம் ஏற்பட்டது என்றால் மூளை உடலின் மீதான கட்டுப்பாட்டை இழந்து விடுகிறது. ஆனால் இந்த மாத்திரைகள் மூளையின் செயல்பாட்டையும் உயிர்ப்பிப்பதாக முதன்முதலில் நிரூபிக்கப்பட்டுள்ளதாக அந்தப் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
முதன்முறையாக வாய் வழியாக கொடுக்கப்படும் மருந்து மூலம் பக்கவாத நோயை குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை தோன்றியுள்ளது.
ஆலிகோடென்ட்ரோசைட்ஸ் (Oligodendrocytes) என்று அழைக்கப்படும் செல்களின் செயலிழப்பைத் தடுக்கும் புதிய வேதிமமும் இந்த சோதனையில் பரிசோதிக்கப்பட்டுள்ளது.
ப்75 என்ற புரோட்டீனை செயலாக்கவிடாமல் தடுத்து ஆலிகோடென்ட்ரோசைட்ஸை பாதுகாக்கிறது இந்த மாத்திரை.
முதுகுத் தண்டு காயத்தினால் இந்த சிறப்பு வாய்ந்த செல்கள் இறந்து போவதற்கு ப்75 என்ற புரோட்டீனே காரணம் என்று முந்தைய ஆய்வுகள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனால் இந்த செல்களின் அழிவை தடுத்தால் பக்கவாதத்தினால் இழந்த செயல்களை மீண்டும் பெறலாம் என்று நம்பப்படுகிறது.
இந்த ஆய்வு நியுரோசயன்ஸ் இதழில் வெளியாகியுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக