வடகொரியாவில் பசிக்கொடுமை தாங்க முடியாமல், பெற்றோர்கள் பிள்ளைகளை கொன்று சாப்பிடும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
வடகொரியாவின் பாரியா மாநிலத்திலும், வடக்கு
ம் மற்றும் தெற்கு ஹ்வாங்ஹே மாகாணங்களிலும் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.
இங்கு பசி தாங்க முடியாமல் சுமார் 10,000 பேர் பலியாகி உள்ளனர் என்று கூறப்படுகிறது, மேலும் அப்பகுதியில் பசியைப் போக்க உணவு இல்லாததால் மனிதர்கள் சக மனிதர்களை கொன்று தின்னும் அவலம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து பத்திரிக்கையாளர் ஒருவர் கூறுகையில், ஒரு மனிதர் பசியின் காரணமாக புதைக்கப்பட்ட தனது பேரனின் சடலத்தை எடுத்து சாப்பிட்டார் என்றும், மற்றொரு நபரோ தனது குழந்தைகளை சமைத்து சாப்பிட்டார் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் பஞ்ச கொடுமை குறித்து பெயர் தெரிவிக்க விரும்பாத ஒருவர் கூறுகையில், எங்கள் கிராமத்தில் கடந்த மே மாதம் தனது இரண்டு குழந்தைகளைக் கொன்று சாப்பிட முயன்ற ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அந்த நபர் தனது மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் முதலில் தனது மகளைக் கொன்றுள்ளார், அதை மகன் பார்த்தால் அவனையும் கொன்றுள்ளார். மனைவி வீடு திரும்பியதும் இன்று சாப்பிட நமக்கு கறி கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த மனைவி இது குறித்து பொலிசாருக்கு தகவல் கொடுக்க அவர்கள் வந்து வெட்டி எடுத்தது போக மீதமுள்ள உடல்களைக் கண்டுபிடித்தனர்.
கடந்த 1990களில் வடகொரியாவில் கடும் பஞ்சம் ஏற்பட்டு 240,000 முதல் 3.5 மில்லியன் பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
0 கருத்து:
கருத்துரையிடுக