புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

கமல் ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் இன்று தனது 27வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு விதித்த தடையை எதிர்த்து கமல் ஹாசன்
சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால் தீர்ப்பு நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கமலின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் இன்று தனது 27வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அப்பா வழியில் நடிக்க வந்த ஸ்ருதி தற்போது இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் பிசியாக இருக்கிறார். அதிலும் குறிப்பாக ஆந்திராவில் அவருக்கு வாய்ப்புகள் வந்து குவிகிறதாம். பெரும்பொருட் செலவில் எடுக்கப்பட்டுள்ள விஸ்வரூபம் மீதான தடை விலகுமா என்று நாளை தெரிந்துவிடும். கேரளாவில் மட்டும் விஸ்வரூபம் எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஓடிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top