மன்னாரில் பிரபல பாடசாலையில் இடம்பெற்ற சைக்கிள் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட மாணவன் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி முன்னிட்டு குறித்த பாடசாலையில் நடத்தப்பட்ட சைக்கிள் ஓட்டப்போட்டி நடத்தப்பட்டுள்ளது.
இப் போட்டியில் கலந்துகொண்ட தரம் 12 ல் கலைப்பிரிவில் கல்வி பயிலும் டி.திணோஷன் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழ்ந்துள்ளார்.
உயிரிழந்த மாணவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மன்னார் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக