அவுஸ்திரேலியாவின் அருங்காட்சியகம் ஒன்றில் பூக்களை சாப்பிட்ட குற்றத்திற்காக ஆடு ஒன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட அதிசய சம்பவம் நிகழ்ந்தது.
ஜிம்தேசமால் என்ற நகைச்சுவை நடிகர் கேரி என்ற பெயர் கொண்ட ஆடு ஒன்றை செல்லப்பிராணியாக வளர்த்து வருகிறார். இவர் சமீபத்தில் சிட்னியில் உள்ள அருங்காட்சியகத்திற்கு சென்ற போது அவருடன் சென்ற ஆடு அங்கு வளர்க்கப்பட்டிருந்த பூச்செடிகளை தின்றுவிட்டதாம்.
இதனையடுத்து அந்த அருங்காட்சியகத்தின் மேலாளர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். இதனால் நீதிமன்றத்துக்கு தனது எஜமானருடன் வந்த ஆடு தலையில் தொப்பியுடன் கம்பீரமாக நடந்து வந்தது.
ஆனால் பாவம் ஆடு பூக்களை தின்றதை நிரூபிக்க முடியவில்லை. இதனால் நடிகரும், ஆடும் விடுவிக்கப்பட்டனர். மேலும் இதே ஆடு கடந்த ஆண்டு பீர் குடித்த வழக்கு ஒன்றில் நீதிமன்றத்தில் ஆஜரானது குறிப்பிடத்தக்கது.
0 கருத்து:
கருத்துரையிடுக