புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மட்டக்களப்பு கடலுக்கு குளிக்கச் சென்ற மட்டக்களப்பு சிவாநந்தா மஹா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவன் ஜெகநாதன் டிலுஷ்காந்த்தை (வயது16) இதுவரையில்
காணவில்லை என அவரின் பெற்றோர் தெரிவித்தனர்.

இம்முறை 2012ம் ஆண்டு நடைபெற்ற கல்விப்பொதுத் தராதரப் பத்திர சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றி பெறுபேறுகளுக்காக காத்திருக்கும் குறித்த மாணவன் இன்று (28) காலை தனது நண்பர்கள் 06 பேருடன் கல்லடி கடற்கரைக்குச் சென்றுள்ளார்.

குளித்துக் கொண்டிருந்த அந்த மாணவன் கடலில் மூழ்கப்போகிறான் என்பதை அறிந்த மாணவன் டிலுஷ்காந்த் தனது நண்பனை காப்பாற்ற முனைந்துள்ளார்.

தனது நண்பனை காப்பாற்றிவிட்டு திரும்ப வருவதற்கு முனைந்த போது அலை பலமாக வீசியதால் அவரால் தப்பமுடியவில்லை. குறித்த மாணவர் தேடப்படுகிறார். இதுவரையில் அவரைக் காணவில்லை

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top