டுபாயில் உள்ள சர்வதேச நகரத்தில் தங்குமிட விடுதியின் நான்காம் மாடியில் இருந்து குதித்து இலங்கைப் பணிப் பெண் ஒருவர் தற்கொலை
செய்து உள்ளார்.
26 வயது உடைய அனுபமா என்பவர் காதலனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக உயிரை மாய்த்து உள்ளார் என்று சொல்லப்படுகின்றது.
ஆயினும் இவரது தற்கொலைக்கான காரணம் குறித்து எதுவுமே தெரியவில்லை என்று தெரிவித்து உள்ளார் இவர் வேலை பார்த்து வந்த சுத்திகரிப்பு கம்பனியின் உரிமையாளரும், இலங்கையருமான ரெரின். ஆயினும் இத்தற்கொலை பேரதிர்ச்சியை தந்து உள்ளது, என்ன நடந்தது? என்பது தெரியவில்லை என்று இவர் கூறி உள்ளார்.
இதே நேரம் விடுதியில் அனுபமாவுடன் தங்கி இருந்த சக பெண் தொழிலாளர்கள் பொலிஸாரால் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
அத்துடன் இத்தற்கொலை தொடர்பாக அனுபமாவின் காதலனும், இதே நிறுவனத்தின் ஊழியருமான அமீல என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
காதல் ஜோடிக்கு இடையில் தகராறு இடம்பெற்றது என்று அறிகிறார் என்று தெரிவித்து உள்ள கம்பனி உரிமையாளர் இத்தற்கொலையில் அமீலவுக்கு சம்பந்தம் இருக்கின்றதா? என்கிற கேள்விக்கு பதில் சொல்ல மறுத்து உள்ளார்.
இதே நேரம் கம்பனி உரிமையாளர் ரெரினுக்கும், ஊழியர் அனுலாவுக்கும் இடையில் முறுகல் காணப்பட்டு உள்ளது. அனுபமாவை ரெரின் தொல்லைகள் செய்து வந்து உள்ளார் என்று நெருக்கமான சிலருக்கு அனுல சொல்லி இருக்கின்றார். இக்கம்பனியில் ஒரு வருடத்துக்கும் மேலாக வேலை பார்த்து வந்திருக்கின்றார் அனுல.
நான்கு மாதங்களுக்கு முன்புதான் இக்கம்பனியில் வேலைக்கு சேர்ந்தவர் அனுபமா. டுபாயில் பல இடங்களிலும் வேலை பார்த்த அனுபவம் இவருக்கு உள்ளது. இவர் எப்போதும் ஜாலியாக நடந்து கொள்வார். கடினமான உழைப்பாளி.
இவரின் சடலம் பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது. இவரின் தற்கொலை குறித்து நாட்டில் உள்ள குடும்பத்தினருக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.

0 கருத்து:
கருத்துரையிடுக