திருமணமான ஒரு மாதத்திலேயே மாயமான 23 வயது நர்ஸ், திருச்சியில் 18 வயது மாணவருடன் மீட்கப்பட்டுள்ளார். திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லாததால் தன் உதவிக்காகவே மாணவனை அழைத்துக்கொண்டு சென்றதாக குறித்த நர்ஸ் கூறியுள்ளார்.
தமிழகத்தின், கன்னியாகுமரி மாவட்டம் வேம்பனூர் விளை வீடை சேர்ந்த ராஜம் என்பவரின் மகள் ராதிகா (23) பெங்களூரில் பி.எஸ்சி நர்சிங்குக்கு படித்து முடித்தார்.
இவருக்கும், சரவணன் என்பவருக்கும் கடந்த நவம்பர் மாதம் குமரி மாவட்டத்தில் திருமணம் நடந்தது. சரவணன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.
திருமணம் முடிந்து ஒரு மாதத்தில் ராதிகா, தான் படித்த கல்லூரியில் இருந்து சான்றிதழ் வாங்கி வருவதாக கூறினார். அதை குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து அவர் பெங்களூர் செல்வதற்காக கடந்த டிசம்பர் 19ஆம் திகதி நாகர்கோவில் ரயில் நிலையத்துக்கு சென்றார்.
அதன்பிறகு அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. நாட்கள் பல ஆகியும் அவர் என்ன ஆனார் என்றே தெரியாமல் இருந்து வந்தது.
இதுபற்றி ரயில்வே பொலிசில் ராஜம் புகார் செய்தார். அதன்பேரில் நாகர்கோவில் ரயில்வே பொலிசார் வழக்குப்பதிவு செய்து நர்சை தேடி வந்தார்.
இந்த நிலையில் சரவணன் வெளிநாட்டு வேலைக்கு புறப்பட்டு சென்று விட்டார்.
இதனிடையே, நர்ஸ் ராதிகா பெங்களூர் செல்லவில்லை என்று பொலிசாருக்கு தெரியவந்தது. ராதிகாவின் செல்போனை வைத்து அவர் எங்கு இருக்கிறார் என்று பொலிசார் விசாரித்த போதுதான் அவர் திருச்சியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனே அங்கு சென்ற பொலிசார், பல்வேறு இடங்களில் தேடி இறுதியாக திருச்சி பஸ் நிலையத்தில் நர்ஸ் ராதிகாவை கண்டு பிடித்தனர்.
அவருடன் பாலிடெக்னிக்கில் சிவில் 2வது ஆண்டு படிக்கும் மாணவர் சஜின் (18) என்பவரும் இருந்தார். இருவரையும் நாகர்கோவிலுக்கு அழைத்து வந்தனர்.
வீட்டுக்கு சொல்லாமல் மாயமானது குறித்து நர்ஸ் ராதிகாவிடம் விசாரித்த போது, ´எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. இதனால் என் உதவிக்காக சஜின் அழைத்துக்கொண்டு சென்று விட்டேன்´ என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து நாகர்கோவில் 1வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நர்ஸ் ராதிகாவும், மாணவர் சஜினும் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது, நீதிபதி சுந்தரய்யா இருவரிடமும் விசாரணை நடத்தி, அவரவர் பெற்றோருடன் செல்லுமாறு அனுப்பி வைத்தார்.
0 கருத்து:
கருத்துரையிடுக