புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஸ்ருதிஹாஸன், அமலா பால் போன்றவர்களுடன் சித்தார்த்துக்கு ரகசிய உறவு இருப்பதாக எழுதிப் போரடித்துவிட்ட நிலையில், இப்போது சமந்தாவும் அவரும் காதலிப்பதாக செய்திகள் வெளியாகின.


தெலுங்கில் இந்த செய்தி இடம்பெறாத மீடியாவே இல்லை எனும் அளவுக்கு பரபரப்பாக பேசினர். ஆனால் சமந்தாவோ அதையெல்லாம் கண்டுகொள்ளாமல், சித்தார்த்துடன் நெருக்கமாக சுற்றி வந்தார்.

படவிழாக்களில் அருகருகே நெருக்கமாக அமர்ந்து, சமந்தா மேல் சாய்ந்தபடி சித்தார்த் சிரித்து பேசுவது போட்டோகிராபர்களுக்கு நல்ல தீனியாக அமைந்தது. ஆனால் இதுபற்றி கேட்ட போது வழக்கம் போல மறுத்துவிட்டார் சமந்தார்.

“என்னைப் பற்றி தொடர்ந்து கிசுகிசுக்கள் பரப்பப்படுகின்றன. யாருடன் ஜோடியாக நடித்தாலும் அவரோடு இணைத்து பேசுகிறார்கள். சித்தார்த்துக்கும் எனக்கும் இடையில் இருப்பது காதல் அல்ல.. நட்பு என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்,” என்றார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top