மட்டக்களப்பு, செங்கலடி பிரதேசத்தில் தலையில் தாக்குதலுக்குள்ளான பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
செங்கலடி பிள்ளையார் கோயிலடியைச் சேர்ந்த ஆறுமுகம் கமலநாயகி (வயது 40) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை தலையில் தாக்குதலுக்குள்ளான இப்பெண் மயக்கமடைந்தவாறு வீட்டில் கிடந்துள்ளார். இதனைக் கண்ட அயலவர்கள் இப்பெண்ணை செங்கலடி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
பின்னர் இப்பெண் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இரவு அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தலையில் ஆயுதத்தால் தாக்கப்பட்டதால் மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டு மரணம் சம்பவித்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக