சீனாவில், அபராதத்தை தவிர்க்க, பெற்ற குழந்தையையே தத்து எடுப்பது போல் நாடகமாடிய பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
சீனாவில் மக்கள் தொகை அதிகம் என்பதால், பிறப்பு விகிதத்தை குறைக்க அந்நாடு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
கடந்த 1979 முதல் சீனர்கள் ஒரு குழந்தை மட்டும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற கடுமையான சட்டம் கொண்டு வரப்பட்டது. இதை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்நிலையில், சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஷீஜியாங்கில் ஒரு பெண், தன் வீட்டு வாசலில் குழந்தை ஒன்று கிடந்தது என்றும் தானே அதை தத்து எடுத்துக்கொள்வதாகவும் பொலிசாரிடம் கூறினார்.
குழந்தையை தத்தெடுக்க அவர் அதிக ஆர்வம் காட்டியதால் சந்தேகமடைந்த அதிகாரிகள் அந்த பெண்ணுக்கும் குழந்தைக்கும் மரபணு சோதனை நடத்தியதில் குழந்தையின் உண்மையான தாய் அவர் தான் என்பது தெரியவந்துள்ளது.
இந்த குழந்தை அவருக்கு இரண்டாவதாக பிறந்ததால் அபராதத்தை தவிர்க்க அவர் இது போன்று நாடகமாடியது தெரியவந்தது.
0 கருத்து:
கருத்துரையிடுக