உலக நாயகன் கமல்ஹாசனுடன் சேர்ந்து நடிக்க ஆசைப்படுவதாக நடிகர் சியான் விக்ரம் கூறியுள்ளார்.
வேலூரில் உள்ள பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சர்வதேச கலாசார மற்றும் விளையாட்டு விழா நிறைவு
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் விக்ரம் கலந்து கொண்டார்.
அப்போது மாணவர்கள் விக்ரமின் கல்லூரி வாழ்க்கை குறித்த கேள்விக்கு பதில் அளித்த விக்ரம், எனது கல்லூரி வாழ்க்கை சுத்த போர்.
பள்ளியில் படிக்கும்போது என்னை ஆண்கள் பள்ளியில் சேர்த்தனர். கோ–எஜூகேஷனில் சேர்க்க சொன்னேன். கல்லூரியில் லயோலா கல்லூரியில் சேர்த்தனர். அப்போது அங்கும் பெண்கள் இல்லை, என்றார்.
பெண் தோழிகள் குறித்த கேள்விக்கு, அதை சொன்னால் பிரச்னை ஏற்படும். இங்கு எனது உறவினர் ஒருவர் படித்து வருகிறார்.
அவர் எனது மனைவியிடம் கூறி விடுவார். நான் 8ம் வகுப்பு படிக்கும் போது ஆசிரியை ஒருவரை காதலித்தேன். ஆனால் அவர் வேறு ஒருவரை மணந்து கொண்டார் என்றார்.
எந்த நடிகருடன் நடிக்க ஆசைப்படுகிறீர்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த விக்ரம், நான் டபுள் ஆக்ஷன் கதாநாயகனாகவும், எனது மகனுடன் சேர்ந்தும் நடிக்க ஆசைப்படுகிறேன்.
உலக நாயகன் கமல்ஹாசனுடன் சேர்ந்து நடிக்க ஆசை என்று தெரிவித்துள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக