புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


வீடு மற்றும் நகைக்காக இரண்டு ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண் திண்டுக்கல்லில் கைது செய்யப்பட்டார்.

விக்டோரியா ராணி என்ற குறித்த இப்பெண், திண்டுக்கல்லில் கணினி நிறுவனம் நடத்தி வந்த சித்திக் என்பவரை 2012ம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். அப்போது, தனது பெயரை வகிதா ராணி என மாற்றிக் கொண்டதாகத் தெரிகிறது.

வகிதா பெயரில் வீடு மற்றும் நகைகள் வாங்கிக் கொடுத்த நிலையில், சித்திக்-குத் தெரியாமல் கடந்த மாதம் 23ம் திகதி ஜெயராஜ் கணபதி என்பவரை திருமணம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து கேட்ட போது, விக்டோரியா ராணியின் உறவினர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக சித்திக் புகார் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து, விக்டோரியா ராணி, அவரது தாயார் மரிய புஷ்பம், உறவினர்கள் ராணி, அருள்ராஜ் ஆகியோரை திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும், விக்டோரியா ராணியை 2வது திருமணம் செய்த ஜெயராஜ் கணபதி உள்ளிட்ட 2 பேரை தேடி வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top