நடிகை திரிஷா தமிழ், தெலுங்கில் தயாராகும் 'ரம்பா, ஊர்வசி, மேனகை' என்ற படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார்.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும்
கதையம்சமுள்ள இப்படத்தில், இஷா சாங்லா, நிகிஷா பட்டேல் ஆகியோர் நடிக்கின்றனர்.
எம்.எஸ்.ராஜூ இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு துபாயில் நடக்கிறது. இதில் முதல் தடவையாக ஆபத்தான சண்டைக் காட்சியொன்றில் திரிஷா நடித்துள்ளார்.
இந்த சண்டைக் காட்சி குறித்து திரிஷா கூறுகையில், 'ரம்பா, ஊர்வதி, மேனகை' படத்தில் சண்டைக்காட்சியில் நடித்தது திகில் அனுபவமாக இருந்தது.
முதல் தடவையாக சினிமாவில் சண்டை போடும் காட்சியில் நடித்துள்ளது புது அனுபவமாக இருந்தது.
எனக்காக சண்டை காட்சிகளை வடிவமைத்த ஸ்டண்ட் மாஸ்டர் விஜயனின் உதவியால் பயிற்சி ஏதும் எடுத்துக்கொள்ளாமல் நடித்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக