புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மகாராஷ்டிரா மாநிலத்தில் ரூ.2.5 லட்சம் திருடி தலைமறைவாக இருந்த வாலிபரை மும்பை பொலிசார், ‌ பேஸ்புக் உதவியுடன் கைது செய்தனர்.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த விஜய்
சவுத்ரி (வயது 23), மும்பையிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 17ம் திகதி, வங்கியில் கட்டுவதற்காக கம்பெனி கொடுத்த பணம் ரூ. 2 லட்சத்து 60 ஆயிரத்துடன் தலைமறைவானார் விஜய் சவுத்ரி. அவரது மொபைல் போனுக்கு தொடர்பு கொண்ட போது, மொபைல் போன் சுவிட் ஆப் செய்யப்பட்டிருந்தது.

பணம் கட்டக்கொடுத்த நாள் முதல் சவுத்ரி வேலைக்கு வருவதையும் நிறுத்தி விட்டான். இதையடுத்து பணத்தை சவுத்ரி கையாடல் செய்து விட்டதை உணர்ந்த தனியார் நிறுவன உரிமையாளர் பொலிசில் புகார் அளித்தார்.

பொலிசார் நடத்திய தீவிர விசாரணையில், விஜய் சவுத்ரி நாக்பூருக்கு தப்பியோடி விட்டதும், தான் சம்பாதிக்கும் பணத்தை பெரும்பாலும் பெண்களுடன் டேட்டிங் மற்றும் விருந்துகளுக்கு செலவழித்ததும் தெரியவந்தது.

இதையடுத்து சவுத்ரியை பிடிக்க பேஸ்புக் என்ற வலையை விரித்தனர் மும்பை பொலிசார். பேஸ்புக்கில் பெண் ஒருவரின் பெயரில் அக்கவுண்ட் தொடங்கப்பட்டது.

அதன் மூலம் விஜய் சவுத்ரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இது பொலிசாரால் விடுக்கப்பட்ட அழைப்பு என்பதை உணராத சவுத்ரி, அந்த பெண் நண்பருடன் அளவளாவியுள்ளார். பின்னர் அந்த பெண் நண்பரை பார்க்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

மும்பை சி.எஸ்.டி., ரயில் நிலையம் வந்தால் தன்னைப் பார்க்கலாம் என கூறியதும் மும்பை கிளம்பியுள்ளார் சவுத்ரி. தங்கள் பணி உரிய திசையில் பயணிப்பதை அறிந்த பொலிசார் சவுத்ரிக்காக ரயில் நிலையத்தில் காத்திருந்தனர்.

எதிர்பார்த்தபடியே, அங்கு சவுத்ரி வர, பொலிசிடம் கையும் களவுமாக பிடிபட்டுள்ளான் சவுத்ரி. துரதிருஷ்டவசமாக, சவுத்ரியிடமிருந்து வெறும் ரூ. 20 ஆயிரம் மட்டுமே கைப்பற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள பணம் வழக்கம் போல், பெண்களுக்காக செலவழித்துள்ளார் சவுத்ரி.

பேஸ்புக்கில் மட்டும் 5 கோடி போலி அக்கவுண்ட்கள் உள்ளன என்பது  கவனத்திற்குரியது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top