அவுஸ்திரேலியா அருகே உள்ள சாலமோன் தீவுகளில் மீண்டும் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவில் 6.5 அலகுகளாக இது பதிவாகி இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சாலமோன் தீவுகளில் கடந்த 7ம் திகதி சாண்டா குரூஷ் தீவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. ரிக்டரில் 8 அலகுகளாக இது பதிவாகி இருந்தது.
இதைத் தொடர்ந்து சுனாமி ஏற்பட்டு 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிப்புக்குள்ளாயினர். 13 பேர் பலியாகியிருந்தனர்.
இந்நிலையில் இன்று காலை மீண்டும் நிலநடுக்கம் உணரப்பட்டிருக்கிறது.
இது ரிக்டர் அளவுகோலில் 6.5 அலகுகளாகப் பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கத்தால் உணரப்பட்ட சேத விவரம் தெரியவில்லை. இதனிடையே இன்று கொலம்பியாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டிருக்கிறது.
0 கருத்து:
கருத்துரையிடுக