இரட்டை பிரஜாவுரிமை என்ற பெயர் மாற்றப்பட்டு வெளிநாட்டில் வாழும் இலங்கையர் என்ற பெயரில் இரட்டை பிரஜாவுரிமை வழங்கும் திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என குடிவரவு- குடியகல்வு திணைக்களத்தின் பிரதான
கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா தெரிவித்தார்.
‘Overseas Srilankan Citizen’’ திட்டம் தொடர்பாக சட்ட வரைஞர் திணைக்களத்தின் திருத்தங்கள் வந்தவுடன் அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் உடனடியாக இத் திட்டம் அமுல்படுத்தப்படும்.
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட புதிய நடைமுறை தொடர்பாக நகரில் சட்டவரைவு அமைச்சரவையின் அங்கீ காரத்தை பெற்றுள்ளது. குடிவரவு தொடர்பாகவும், பிரஜாவுரிமை தொடர்பாகவும் இரண்டு விடயங்கள் இச்சட்ட வரைவுக்குள் இணைக்கப்பட்டுள்ளன. சட்டவரைஞர் திணைக்களத்தினால் முன்வைக்கப்பட்ட இத்திருத்தங்கள் தொடர்பில் குரவரவு - குடியகல்வு திணைக்களம் இணங்காத காரணத்தினால் இத்திருத்தங்கள் இரண்டையும் ஏற்கனவே பெறப்பட்ட அமைச்சரவை அங்கீகாரத்துக்கு உட்பட்ட விதத்தில் திருத்தித் தருமாறு சட்டவரைஞர் திணைக்களத்திடம் கோரப்பட்டுள்ளது.
சட்டவரைஞர் திணைக்களம் திருத்தங்களை முன்வைத்ததுடன் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கும் புதிய நடைமுறை அமுல்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டார். இந்த திட்டம் 2013 ஜனவரி முதல் நடைமுறைப்படுத்துவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
0 கருத்து:
கருத்துரையிடுக