ஜேர்மனியில் விபசார விடுதியில் பணிப்பெண் வேலைக்கு வருமாறு பெண் ஒருவருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய நாடான ஜேர்மனியில் கடந்த 2002ம் ஆண்டு முதல் பாலியல் தொழிலாளர்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்நாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்தார்.
சமீபத்தில் வேலை வாய்ப்பு அலுவலகம் குறித்த பெண்ணுக்கு பணி நியமன கடிதம் அனுப்பியிருந்தது. ஆனால் அதை படித்த பெண்ணும், அவரது தாயும் அதிர்ச்சி அடைந்தனர்.
அக்கடிதத்தில் விபசார விடுதி ஒன்றில் பணிப்பெண் வேலைக்கு வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் விபசாரத்தில் நேரடியாக ஈடுபட வேண்டியதில்லை என அதில் எழுதப்பட்டிருந்தாலும், அந்த மாதிரியான இடத்தில் நான் வேலை செய்யப் போவதில்லை என அந்த பெண் உறுதியாக மறுத்துவிட்டார்.
0 கருத்து:
கருத்துரையிடுக