புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


திண்டுக்கல்லில் 62 வயது முதியவர் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து தன்னை பல முறை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியதாக பெண் ஒருவர் பொலிஸில்
முறைப்பாடு செய்துள்ளார்.

திண்டுக்கல் ஆரோக்கியமாதா தெருவை சேர்ந்த 25 வயது பெண், எஸ்.பி., ஜெயச்சந்திரனிடம் அளித்த முறைப்பாடு,

திண்டுக்கல் குள்ளனம்பட்டி சித்திக் 62, கணனி உதிரிப்பாக கடை வைத்துள்ளார். இக்கடையில் நான் பணியாற்றினேன்.

அப்போது என்னை மகள் மாதிரி என அடிக்கடி கூறி வந்தார். இதைநம்பி, அவரிடம் பழகி வந்தேன்.

குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து எனக்கு கொடுத்தார். இதை நான் குடித்து மயங்கிய போது பலாத்காரத்திற்கு உட்படுத்தி விட்டார்.

இச்சம்பவத்தை வீடியோ எடுத்து வைத்து இருப்பதாகவும், நான் ஆசைக்கு இணங்காவிட்டால், ஊருக்கு போட்டு காட்டுவதாகவும் மிரட்டி, பல முறை பலாத்காரத்திற்கு உட்படுத்தினார்.

இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறியிருந்தார்.

குறித்த முறைப்பாடு தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டு சித்திக் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top