அமெரிக்கா தந்தை, தன் மகளிடம் பேஸ்புக் கணக்கை முடித்துக் கொள்ள ஒரு புதிய ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளார்.
அமெரிக்க தந்தை தன் மகளிடம் பிரபல சமூக வலைதளமான "பேஸ்புக்" கணக்கை முடித்துக் கொள்ளவும், இனி தொடர்ந்து உபயோகிக்காமல் இருக்கவும் 11 ஆயிரம் ரூபாய்க்கு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த 14 வயது பெண் பேஸ்புக்கை தொடர்ந்து உபயோகித்துள்ளதால் தன் பெற்றோருடன் பேசக்கூட நேரமில்லாமல் இருந்தது.
இச்சிறுமியின் செயலால் எரிச்சலடைந்த தந்தை பல முறை கெஞ்சியும் மிரட்டியும் கூறியுள்ளார். ஆனால் அவள் எதையும் கேட்டதாக தெரியவில்லை.
இதையடுத்து இருவருக்குமிடையே ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டதன் படி தன் மகளிடம் பேஸ்புக்கை பயன்படுத்தாமல் இருக்க 11 ஆயிரம் ரூபாய் தருவதாக கூறியுள்ளார். இதை தொடர்ந்து அச்சிறுமியும் பேஸ்புக்கை இனி பயன்படுத்தப்போவதில்லை என்று தந்தையிடம் முறையாக ஒப்பந்தம் செய்துகொண்டார்.
0 கருத்து:
கருத்துரையிடுக