தமது இரண்டு பிள்ளைகளுக்கும் நஞ்சருந்த கொடுத்துவிட்டு, தந்தையும் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் ஒன்று நேற்று முன்தினம் கண்டி - கட்டுகலையில் இடம்பெற்றது.
மரணமான நபர் தமது மனைவிக்கு எழுதிய கடிதத்தில், தமது மூத்த மகனுடன் நலமாக வாழுமாறு கூறியிருந்தார். அவரது மனைவிக்கு சிறு பிள்ளைகளை பார்த்துக் கொள்வதில் சிரமம் இருக்கும் என்பதாலேயே, தமது இளைய இரண்டு பிள்ளைகளையும் தம்முடன் அழைத்து செல்வதாக கடிதத்தில் அவர் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் விளக்கமளித்துள்ள மனோதத்துவ வைத்தியர்கள், தற்கொலை செய்து கொள்வது என்பது ஒருவகையான மனவியாதி என்று தெரிவித்தனர்.
மனரீதியாக ஏற்படுகின்ற அழுத்தங்களாலேயே இவ்வாறான தீர்மானங்களை மேற்கொள்வதாக, பிரபல மனோதத்துவவியல் வைத்தியர் ரூமி ரூபன் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்தி
0 கருத்து:
கருத்துரையிடுக