புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

வவுனியா தட்சனாங்குளத்தில் நீராடிக் கொண்டிருந்த இளைஞனொருவன் நீரில் முழ்கி உயிரிழந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா தோணிக்கல்
பிரதேசத்தைச் சேர்ந்த செல்லையா கோபிசாந் (வயது 17) என்ற இளைஞனே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் நேற்று மாலை தனது நண்பர்களுடன் தட்சனாங்குளத்தில் நீராடிக் கொண்டிருந்தவேளை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. எனினும், இவர்கள் அனைவரும் மதுபோதையிலேயே நீராடியுள்ளதாக பொலிஸாரின் விசாரணையின் போது தெரியவந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top