கனடாவிலுள்ள கோட்டிங்சென்(Gottingen) என்ற தெருவில் கடை வைத்திருக்கும் ஒரு முதியவரைச் சிலர் துப்பாக்கியால் தாக்கிவிட்டு சிகரெட் பெட்டிகளைத் திருடிச் சென்றுள்ளனர்.
நேற்று மதியம் 12.20 மணியளவில் முகமூடி
அணிந்த மூன்று பேர் துப்பாக்கியுடன் கிட்-காட் பிஸா கடைக்குள் புகுந்துள்ளனர்.
அவர்கள் கடைக்காரப் பெரியவரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அவர் தரமறுத்ததால் அதில் ஒருவன் அவர் தலையில் துப்பாக்கி கட்டையால் ஓங்கி அடித்ததால் அவர் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. முகமூடியர்கள் சிகரெட் பெட்டிகளை அள்ளிக் கொண்டு ஓடிவிட்டனர்.
பின்னர் காயம்பட்ட பெரியவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு எடுத்துச் சென்றதாக காவல்துறை அதிகாரி ரெய்ட் மெக்கோம்ப்ஸ்( Reid McCoombs) தெரிவித்துள்ளார்.
மேலும் இவர்களைப் பற்றித் தகவல் தெரிந்தால் உடனே தங்களுக்குத் தெரிவிக்கும்படி பொதுமக்களிடம் பொலிசார் அறிவித்துள்ளனர். முகமூடித் திருடர்கள் மூவரில் ஒருவன் 14 வயது மதிக்கத்தக்க சிறுவன் என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்து:
கருத்துரையிடுக