நைஜீரியாவில் ஏற்படும் வெள்ளத்தால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படக்கூடாது என்ற வகையில் சமீபத்தில் மிதக்கும் பாடசாலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
நைஜீரியாவின் அதிக ஜனத்தொகை மிக்க நகரான லாகோஸில் அமைந்துள்ள மக்கோக்கோ எனும் ஓடைகள் மிகுந்த பகுதியில் ஒன்றுடன் ஒன்று முட்டுக்கட்டையாக அமைந்திருக்கும் தற்காலிக கட்டடங்களில் 250 000 பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நகரில் முக்கிய போக்குவரத்து சாதனமாக படகுகள் உபயோகிக்கப்படுத்தப்பட்டு வருகின்றன.
இப்பகுதி அடிக்கடி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அதனால் அங்கு நிலையான வீடுகளை அமைப்பது கடினம் எனவும் நைஜீரிய சிற்பி ஒருவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் தற்போது அங்கு மிகக் குறைந்த செலவில் ($ 6250) 108 சதுர அடி பரப்பளவில் அத்திவாரமும் 33 அடி உயரத்திலும் ஒரு பாடசாலை அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மிதக்கும் தளம் 256 பிளாஸ்டிக் டிரம்களாலும் உடல் முற்றிலும் மரத்தாலும் ஆக்கப்பட்டுள்ளன.
இப்பாடசாலைக் கட்டடம் சுமார் 100 மாணவர்கள் கற்பதற்கு ஏற்ற வசதியுடையது.
மேலும் இதன் உள்ளே உள்ள மின்விளக்குகளுக்கான மின்சாரம் கூரையிலுள்ள சூரிய சக்திப் படல்கள் மூலம் சூரிய ஒளியில் இருந்து பெறப்படுகின்றது. இக்கட்டடம் மழைநீரை அப்படியே உள்வாங்கி சற்றும் ஒழுகாமல் வெளியேற்றக் கூடியது. மேலும் இப்பாடசாலைக்குள் சொந்தமாக மலசலக்கூடமும் அமைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்நகரில் அமைக்கப்பட்டிருந்த பள்ளிகள் வெள்ளத்தால் அடிக்கடி பாதிக்கப் பட்டு மாணவர்களின் கல்வியும் தடைப்பட்டதாலேயே இந்த மிதக்கும் பாடசாலைத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இனி வருங்காலத்தில் நைஜீரியாவில் மட்டுமன்றி மேற்கு ஆபிரிக்காவில் உள்ள செனெகல் போன்ற நாடுகளிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வரும் இடங்களில் இதே போன்ற பள்ளிகள் அமைக்கப்படும் சாத்தியக் கூறுகள் அதிகமாகியுள்ளது.

0 கருத்து:
கருத்துரையிடுக