கனடாவில் குப்பை லாரி மோதியதில் 5 வயதுச் சிறுமி பலி
கனடாவிலுள்ள டொரண்டோ கிழக்கு முடிவுப் பகுதியில் 5 வயதுச் சிறுமி ஒருவர் குப்பை லாரி மோதியதில் மரணமடைந்துள்ளார்.
இந்தச் சிறுமி உட்பட மூன்று குழந்தைகள் இந்த லாரியில் அடிபட்டிருக்கின்றார்கள். இந்த விபத்து மிட்லாண்ட் மற்றும் கிங்ஸ்ரன் சந்திப்புக்கு அருகில் நடைபெற்றுள்ளது எனவும் தெரிய வருகின்றது.
இந்த விபத்து எப்படி நடந்தது, இதற்கு என்ன காரணம் போன்ற விடயங்கள் பற்றி சரியாக தெரியவில்லை. அவசர பாதுகாப்புக் குழுவானது 3 குழந்தைகளை விரைந்து மருந்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளது.
அதில் 5 வயதுக் குழந்தை ஒன்று இறந்துவிட்டதாகவும், மற்ற இரு சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக