இடநெருக்கடியின் காரணமாக ஜப்பானியர்கள் சவப்பெட்டி அளவை விட சற்று பெரிய அறைகளில் வசித்து வருகிறார்கள்.
உலகிலேயே அதிக மக்கள் நெருக்கடி கொண்ட நகரங்களில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவும் ஒன்று.
இந்நகரில் வேலை செய்ய அந்நாட்டின் பல பகுதிகளிலிருந்து மக்கள் வருவதால் அங்கு இடநெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் அங்குள்ள அடுக்கு மாடி குடியிருப்புகளில், சவப்பெட்டி அளவை விட கொஞ்சம் பெரிய அளவு கொண்ட அறைகள் வாடகைக்கு விடப்படுகின்றன. வேலை பார்ப்பதற்காக நாள் முழுதும் அலுவலகங்களில் செலவிடுபவர்கள், தூங்குவதற்கு மட்டும் இந்த அறைகளை பயன்படுத்துகின்றனர்.
இந்த அறைகளில் சிறிய பொருட்களை மட்டும் வைத்துக்கொள்ள முடியும். மற்றபடி, படுக்கை விரித்து, அதில் தூங்கிக்கொள்ளலாம்.
எனினும் ஆறடிக்கு மேல் உயரம் கொண்டவர்கள் பாடு திண்டாட்டம் தான். அவர்களால், வசதியாக காலை நீட்டி படுக்க முடியாது.
"கெக்கீ-செமா" என்று அழைக்கப்படும் இந்த அறைகளில், ஜன்னலே கிடையாது. அத்துடன், இந்த குட்டி அறைகளின் மாத வாடகை, 33 ஆயிரம் ரூபாய் ஆகும். இருந்தாலும், வேறு வழியில்லாமல் இந்த அறைகளில் ஜப்பான் இளைஞர்கள் தங்கி உள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக