புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சுவிட்சர்லாந்தில் ஒருவர் தனது மகள் மற்றும் அவளது தோழியிடம் தவறாக நடந்து கொண்டதாக சிறை தண்டனைக்குப் பயந்து கடந்த 2011ம் ஆண்டு
தாய்லாந்தில் ஓடி ஒளிந்தார்.
செயிண்ட் கேலனைச்(St Gallen) சேர்ந்த 56 வயது முதியவர் ஒருவர் மீதே பல பாலியல் வன்முறை வழக்கு, முறைசாராப் பாலுறவுக் குற்ற வழக்குகளுக்குகாக நீதிமன்றம் அவருக்கு ஆறாண்டு சிறைத்தண்டனை விதித்தது.

அவர் தாய்லாந்துக்கு ஓடியதால் கடந்த ஜனவரியில் தாய்லாந்து பொலிசார் கைது செய்துள்ளனர். தற்பொழுது சுவிட்சர்லாந்துக்கு அவரைத் திருப்பியனுப்ப தாய்லாந்து அரசு ஒத்துக்கொண்டது.

இந்நிலையில் அவர் மிகவும் குண்டாக இருப்பதாலும், பலநோய்நொடிகளுக்கு ஆட்பட்டு இருப்பதாலும் திருப்பியனுப்பும்பொழுது கவனமாக இருக்கு வேண்டும் என்று தாய்லாந்து பொலிசார் கருதி தனது கருத்தை சுவிஸ் அரசுக்கும் தெரிவித்துள்ளனர்.

உடனே சுவிட்சர்லாந்து அரசு இங்கிருந்து இரண்டு காவலதிகாரிகளையும், ஒரு மருத்துவரையும் பேங்காக்குக்கு அனுப்பி அந்த முதியவரைப் பாதுகாப்பாக அழைத்து வரும்படி உத்தரவிட்டுள்ளது.

மேலும் இது குறித்து செயிண்டி கேலன் சிறைத்துறையின் தலைவரான ஜோ கீல்(Joe Keel) கூறுகையில், முதியவர் திரும்பிவருவதற்கான விமானப் பயணம் உறுதிசெய்யப்பட்டுவிட்டதாக தெரிவித்துள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top