கென்யா நாட்டிற்கு ஜனாதிபதி ஆகுவதே என் லட்சியம்-ஒபாமா அண்ணன்
கென்யா நாட்டிற்கு ஜனாதிபதி ஆகுவதே என் லட்சியம் என ஒபாமாவின் சகோதரர் மாலிக் ஒபாமா கூறியுள்ளார்.
ஒபாமா அண்ணன் மாலிக் ஒபாமா, சமீபத்தில் கென்யாவின் சியாயா பகுதி ஆளுநர் போட்டியில் தோல்வி அடைந்தார்.
இருப்பினும் தனது தம்பியான ஒபாமாவைப் போல நிச்சயம் ஒருநாள் கென்யாவிற்கு ஜனாதிபதி ஆகுவேன் என உறுதி கூறுகின்றார்.
மாலிக் ஒபாமாவிற்கு 12 மனைவிகள் என்பதும் சமீபத்தில் 17 வயது பெண்ணொருவரை திருமணம் முடித்துக்கொண்டதாகவும் தன்னை மாலிக் தினசரி அடித்து அசிங்கமான வார்த்தைகளால் திட்டி கொடுமைப்படுத்துவதாக அப்பெண்மணி குற்றம் சாட்டுகிறார்.
இதேவேளையில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி மிசெல் மிகவும் அருமையான பெண் என்று மாலிக் ஒபாமா கூறுகிறார்.
அண்ணன், தம்பி இருவரும் அடிக்கடி போனில் தங்களது உறவை பரிமாறிக் கொள்வதாகவும் வருடத்திற்கு ஒருமுறை வாஷிங்டன் சென்று ஒபாமாவை சந்தித்து விடுவார் எனவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
0 கருத்து:
கருத்துரையிடுக