செங்கல் உண்ணும் மனிதன்-காணொளி
இன்றைய புத்தம் புதிய யுகத்தில் எத்தனையோ விதவிதமான சாப்பாட்டுப்பண்டங்கள் இருக்க எம்மவர்கள் இன்னும் கற்களையும் மண்ணையும் உண்டு எம்மை வியக்க
வைத்துக்கொண்டிருக்கின்றனர்.
எமது சாந்தை இணையத்தின் தேடலை உங்களுடன் பகிர்கிறோம்
இந்தியாவைச்சேர்ந்த 25 வயதான இளைஞன் மரிமாறன். இவர் தான் ஐந்து வயதாக இருக்கும் போது யாருக்கும் இல்லாத ஒரு பொழுதுபோக்கை கடைப்பிடித்திருக்கின்றார். அதுதான் கிறவல் கற்கள் மற்றும் கிறவல் மண் அத்துடன் செங்கல் கட்டிகளை உண்ணுவது.
என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம் இவற்றில் இவருக்கு ரொம்பவும் பிடித்தது செங்கல் தானாம். குழந்தை கையில் சாக்லெட்டை வைத்து சாப்பிடிவது போன்று தானும் முழுமையான செங்கல்லை எடுத்து கடித்து ருசித்து உண்ணுகிறார்.
இவர் உலகசாதனைக்காகத்தான் இவ்வாறு மேற்கொள்வதாக கூறப்படுகிறது. இருந்தாலும் இதுபற்றி டாக்டர்கள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
0 கருத்து:
கருத்துரையிடுக