புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இலங்கையில் தற்போது பயன்பாட்டில் உள்ள தேசிய அடையாள அட்டைக்கு பதிலாக, விரைவில் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகத்
தெரிவிக்கப்படுகிறது.

புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய தேசிய அடையாள அட்டைகள் விரைவில் வழங்கப்பட உள்ளன. இதற்கான ஆரம்பப் பணிகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் எஸ்.சரத் குமார தெரிவித்துள்ளார்.

பிரதேச செயலகங்களின் ஊடாக நபர்களின் தகவல்களை ஆட்பதிபு திணைக்களம் திரட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் சகல பிரஜைகளினதும் தகவல்களை கணனி மயப்படுத்தப்பட உள்ளதாகவும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தேசிய அடையாள அட்டைகளை இதன் மூலம் வழங்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு முதல் இலத்திரனியல் அடையாள அட்டைகளை விநியோகம் செய்ய முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top