அமெரிக்காவில் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் மீது மோதல்
நியூயார்க் விமான நிலையத்தில் நின்று கொண்டிருந்து ஏர்இந்தியா விமானம் மீது மற்றொரு விமானம் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் ஏர்இந்தியா விமானம் நின்று கொண்டிருந்தபோது 150 பயணிகளுடன் புளோரிடாவில் இருந்து வந்த ஜெட் புளூஎன்ற விமானம் தரையிறங்கிய போது ஏர்இந்தியா விமானத்தின் மீது மோதியது.
இதில் ஜெட் புளு விமானத்திற்கு சிறிது சேதம் ஏற்பட்டது. உயிரிழிப்புகள் குறித்த தகவல்கள் இல்லை.
விமானங்கள் மோதலால் மற்ற விமானங்கள் புறப்படுவதிலும், தரையிறங்குவதில் மூன்று மணி நேரம் பாதிப்பு ஏற்பட்டதாக விமான நிலைய செய்தி தொடர்பாளர் கூறினார்.
0 கருத்து:
கருத்துரையிடுக