அமெரிக்காவில் பறவைகளை அழிக்கும் மரப் பாம்புகளை கொல்ல முடிவு
பறவைகளை அழிக்கும் மரப் பாம்புகளை கொல்ல இறந்த எலிகளை பயன்படுத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள குவாம் தீவு, அமெரிக்காவுக்கு சொந்தமானது. இந்த தீவில், 20 லட்சத்துக்கும் அதிகமான பழுப்பு நிற மரப்பாம்புகள் உள்ளன.
சிறிய வகை விலங்குகளையும் பறவைகளையும் உணவாக கொள்ளும் இப்பாம்பு, 8 அடி நீளம் வரை வளரும். இவை, அத்தீவில் உள்ள பறவைகளில் பெரும்பாலானவற்றை அழித்துவிட்டன.
எனவே, இப்பாம்புகளை அழிக்க அமெரிக்க வேளாண் துறை புதிய வழி ஒன்றை பின்பற்ற உள்ளது.
இறந்த எலிகளின் உடலில் விஷம் செலுத்தி, விமானத்திலிருந்து குவாம் தீவின் புதர்கள் அடங்கிய பகுதி மீது வீச, முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த எலிகளை தின்ற 72 மணி நேரத்தில் பாம்புகள் உயிரிழந்துவிடும். அமெரிக்க பாதுகாப்பு துறை, இத்திட்டத்துக்கு நிதி உதவி செய்கிறது.
0 கருத்து:
கருத்துரையிடுக