டெங்கு நோயின் அறிகுறிகள் என்ன?
ஒருவகை வைரஸ் காய்ச்சல். ‘ஆர்போ’ என்ற வைரஸால் உருவாகிறது. டெங்கு பாதித்த ஒருவரை ஏடிஸ் எஜிப்டி என்ற பகல் நேரத்தில் கடிக்கும்
கொசு கடித்ததும், கொசுவின் உடலுக்குள் செல்லும் ‘ஆர்போ’ வைரஸ் வளர்ந்து கொண்டேயிருக்கும். மற்றவரைக் கடிக்கும்போது ரத்தத்தில் கலந்து
விடும்.
கொசுவின் உடலுக்குள் ஒருமுறை செல்லும் ‘ஆர்போ’ வைரஸ் 2 வாரங்கள் வரை வீரியத்தோடு இருக்கும். ஏடிஸ் கொசுக்கள் நல்ல தண்ணீரில் வளரக்கூடியவை.
அறிகுறிகள்?
கடும் காய்ச்சல், தலைவலி, கண்களின் உட்பக்கம் வலி, காய்ச்சல் திடீரென நின்று இரண்டு நாட்களில் திரும்பவும் வரும். உடலில் அரிப்பு, குமட்டல்,
வாந்தி, தோலில் சிவந்த புள்ளிகள் தோன்றுதல் எல்லாம் அறிகுறிகள். டெங்குவுக்கு தடுப்பூசி கிடையாது. தனியாக எந்த மருந்துகளும் இல்லை.
சாதாரண வைரஸ் காய்ச்சலுக்குத் தரப்படும் பாரசிட்டமால், ஆன்ட்டி பயாடிக் மாத்திரைகள்தான் தரப்படும். அவசியம் ஏற்பட்டால், குளுக்கோஸ்
ஏற்றவேண்டும். பாதிப்பு அதிகமானால் ரத்தம் அல்லது பிளேட்லெட்ஸ் ஏற்ற நேரலாம்.
டெங்கு வந்தால் உயிர் போகுமா?
டெங்கு வந்தாலே இறப்பு நேரும் என்பது மூட நம்பிக்கை. நோய் எதிர்ப்பு சக்தி, ஜீன் அடிப்படையில் இதன் தாக்கம் இருக்கும். அறிகுறிகள் தெரிந்தவுடனே சிகிச்சை எடுத்துக்கொண்டால் 1 வாரத்தில் குணமாகிவிடும். அலட்சியம் செய்தால், நிணநீர் சுரப்பி வீங்கிவிடும். காய்ச்சலும் அதீத உடம்பு வலியும் இருக்கும். நெறி கட்டிக்கொள்ளும். இது இரண்டாம் நிலை. இதற்கும் சாதாரண சிகிச்சையே போதும்.
இதற்கு மேலும் உரிய சிகிச்சை மேற்கொள்ளாமல் விட்டால் கல்லீரல், மண்ணீரல் வீங்கிவிடும். எழுந்து நடமாட முடியாத நிலை ஏற்படும்.
இது மூன்றாம் நிலை. குளுக்கோஸ் ஏற்ற வேண்டும். இதற்கு அடுத்த நிலைதான் சற்று விபரீதம். மலம், சிறுநீரில் ரத்தக்கசிவு ஏற்படும். பல் ஈறு, மூக்கு, தோல்பகுதியில் திடீரென ரத்தம் கசியும். தகுந்த நேரத்தில் ரத்தமோ, ரத்தத் தட்டணுவோ ஏற்றுவதன் மூலம் இதையும் குணப்படுத்தி விடலாம்.
மனித உடலில் ரத்தம் உறையும் தன்மையைக் காக்கும் தட்டணுக்கள் 1.5 லட்சம் முதல் 5 லட்சம் வரை கியூபிக் மில்லி மீட்டர் அளவுக்கு இருக்க வேண்டும். எண்ணிக்கை 40 ஆயிரத்துக்கும் கீழே சென்றால் உடனடியாக ரத்தம் அல்லது ரத்தத் தட்டணு ஏற்ற வேண்டும்.
‘‘டெங்கு வந்தாலே பலபேர் பதற்றமாயிடுறாங்க. அது தானா வரும்; தானா போகும். இதை ‘7 நாள் காய்ச்சல்’னு சொல்லுறதுண்டு. இதுவும் சாதாரணமான வைரஸ் காய்ச்சல்தான். வழக்கமா காய்ச்சலுக்குக் கொடுக்கிற சிகிச்சையே இதுக்குப் போதும். 100ல் 2 பேருக்கு ரத்தத் தட்டணுக்களின்
எண்ணிக்கை குறையலாம்.
ரத்தமோ, ரத்தத் தட்டணுவோ ஏத்தினா அவங்களையும் குணப்படுத்திடலாம். சரியான நேரத்தில கண்டறிஞ்சு சிகிச்சை அளிக்காத பட்சத்தில, எதிர்ப்பு சக்தி குறைந்த ஒரு சிலருக்கு மரணம் நேரலாம்’’ என்று கூறும் மக்கள் நல்வாழ்வு இயக்கத் தலைவர் டாக்டர் ரெக்ஸ் சற்குணம், ‘‘முன்கூட்டியே அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தியிருந்தால் இதுபோன்ற பதற்றம் ஏற்பட்டிருக்காது.
பல தாலுக்கா மருத்துவமனைகளில் போதிய ஏற்பாடுகள் இல்லை. அவசரத்துக்குப் பயன்படுத்த ரத்த தட்டணுக்களும் இருப்பு இல்லை. அதனால மக்கள் தனியார் மருத்துவமனைகளை நாடுகிறார்கள்’’ என்று வருந்துகிறார்.
0 கருத்து:
கருத்துரையிடுக