நைஜீரியாவின் வடக்கு ஷம்பரா மாகாணத்தில் உள்ள கிராமங்களில் ஏற்பட்டுள்ள உயிரிழப்பை தரக்கூடிய மாசடைதல் தொடர்பில் மிகவும் தாமதமான, செயற்திறனற்ற பதில் நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பில் அந்த
நாட்டு அரசாங்கத்தை மருத்துவ தொண்டு அமைப்பான எம்எஸ்எஃப் குற்றஞ்சாட்டியுள்ளது.
கடந்த நான்கு வருடங்களில் அங்கு ஈய நஞ்சால், 450 க்கும் அதிகமான சிறார்கள் உயிரிழந்துள்ளனர்.
ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் சிகிச்சை பெறுகிறார்கள்.
உள்ளூரில் உள்ள சுரங்கங்களில் தங்கத்தை பிரித்தெடுப்பதற்காக கிராம மக்கள் உயர் நஞ்சுள்ள ஈயத்தை பயன்படுத்துகிறார்கள்.
ஆனால், அது அவர்களது வீடுகளைச் சுற்றவரவுள்ள மண்ணை மாசடையச் செய்துவிடுகிறது.
இந்தப் பிரச்சினையை கையாள அங்கு ஏன் அரசாங்கம், விஞ்ஞானிகளையும், மருத்துவர்களையும் அனுப்பவில்லை என்று எம்எஸ்எஃப் கேள்வி எழுப்பியுள்ளது.
தாம் தம்மால் முடிந்த நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் கூறியுள்ள அரசாங்கம், கிராம மக்கள் சட்டவிரோத தங்க அகழ்வில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டியுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக