புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சொல்லாமலே, ரோஜாகூட்டம், டிஷ்யூம், பூ படங்களை இயக்கிய இயக்குனர் சசி, பரத்தை நாயகனாக வைத்து 555 என்ற படத்தை இயக்கி வருகிறார்.


இப்படத்தின் ஆடியோ வெளியீடு 15ம் திகதி சென்னையில் நடக்கிறது. இப்படத்தில் மூன்று விதமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் பரத்.

மீசை இல்லாமல், தாடி வைத்து, தலையில் நீண்ட முடி மற்றும் மொட்டைத்தலை என மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

அதோடு சில காட்சிகளில் சிக்ஸ்பேக்கிலும் வருகிறாராம். அதற்காக 9 மாதம் உணவு கட்டுப்பாட்டை கடைபிடித்த பரத், 6 மாத காலமாக தினமும் உடற்பயிற்சியும் மேற்கொண்டுள்ளார்.

மேலும் இப்படத்தில் பரத்தின் அண்ணனாக நடிப்பவர் சந்தானம். அதனால் வழக்கம் போல் கொமடியில் கலக்கும் அவர், செண்டிமென்ட் காட்சிகளிலும் நடித்துள்ளாராம்.

அந்த காட்சிகளில் அதிக எமோஷனலாக வித்தியாசமாக நடித்துள்ளாராம் சந்தானம். அந்த வகையில் சந்தானத்துக்குள் இருந்த ஒரு செண்டிமென்ட் நடிகரையும் இப்படத்தில் வெளியே கொண்டு வந்திருக்கிறாராம் இயக்குனர்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top