புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


விண்வெளியில் பறக்கும் வீரர்களுக்கு பெருங்குடல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஞ்ஞானிகள்
கண்டறிந்துள்ளனர்.
இது குறித்து ஜியார்ஜ்டவுண் லொம்பார்டி கேன்சர் ஆராய்ச்சி மையத்தில் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில், அண்டக் கதிர்வீச்சின் தாக்கம் எலியின் குடல் பகுதியில் ஆன்கோஜெனிக் புரதங்களை அழித்து விடுவதாகவும், அதுபடிப்படியாக பெருங்குடல் புற்றுநோயாக மாற சாத்தியமுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

நாசா விண்வெளி வீரர்களின் நலனில் அக்கறை கொண்டு அவர்களை புற்றுநோயிலிருந்து காக்க பெரும் முயற்சிகள் எடுத்து வருவதாக விஞ்ஞானி சுபாங்கர் சுபன் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து பேராசிரியர் தத்தா கூறுகையில், விண்வெளி பயணம் மேற்கொண்டால் கட்டாயம் புற்றுநோய் ஏற்படும் என்பதில்லை ஆனால் அதற்கான அதிகப்படியான சாத்தியக்கூறுகள் உள்ளன என்று கண்டறிந்துள்ளோம் என்று விளக்கமளித்துள்ளார்.

இந்த ஆய்வு நாசாவின் நிதியுதவியுடன் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top