இந்தோனேசியாவின் சுற்றுலாத்தலமாக விளங்கும் பாலித் தீவிற்கு வருடத்திற்கு 10 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
இங்குள்ள தென்பசார் என்ற விமானத் தளத்திலிருந்து 130க்கும் மேற்பட்டோரை ஏற்றிக்கொண்டு இன்று லையன் ஏர் போயிங் 737 என்ற விமானம் ஒன்று புறப்பட்டது.
ஓடுதளத்தில் சென்றுகொண்டிருந்த அந்த விமானம் கட்டுப்பாட்டை இழந்து திடீரென அருகில் இருந்த கடலுக்குள் பாய்ந்தது. ஆனால் எந்தவித சேதாரமும் இன்றி விமானத்தில் இருந்த அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
மீட்கப்பட்டவர்களில் தலை மற்றும் கையில் காயமடைந்த 7 பேரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக