தந்தையின் கால் எலும்பை அடித்து முறித்த மகனை, பொலிஸார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமத்தி இலங்கை தமிழர் முகாமைச் சேர்ந்தவர் நடராஜன், 62. நாள்தோறும் மது அருந்திவிட்டு, வேலைக்குச் செல்லாமல், ஊர் வம்புக்கு செல்வதை, நடராஜன் வாடிக்கையாக கொண்டிருந்தார்.
நேற்று முன்தினம் இரவு, குடிபோதையில் வெளியாட்களிடம் தகராறு செய்து விட்டு, வீட்டுக்கு வந்தார். அதுதொடர்பாக, நடராஜன் மகன் கேத்தீஸ்வரனிடம், அவரது மனைவி மலர் புகார் செய்தார்.
ஆத்திரமடைந்த கேத்தீஸ்வரன், வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து, அதன் கைப்பிடி மூலம் தந்தை நடராஜனின் இருகால் பாதத்திலும் சரமாரியமாக தாக்கி, எலும்பை முறித்தார்.
படுகாயமடைந்த நடராஜன், நாமக்கல் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பரமத்தி பொலிஸார், கேத்தீஸ்வரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக