புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

பீகாரில் வசிக்கும் தலை ஒட்டிப்பிறந்து வாழும் இரு இளம் பெண்களின் சோகமான செய்தியினையே இன்று விசித்திர மனிதர்கள் பகுதியில் நீங்கள் பார்க்க இருக்கிறீர்கள்.

பிகார் தலைநகர் பாட்னாவில் தலை ஒட்டிய நிலையில் பிறந்த இரட்டை சகோதரிகளை அறுவை சிகிச்சை மூலம் பிரிக்க உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 17 வயதான சாபஹா மற்றும் ஃபாரா என்கிற அந்த சகோதரிகளுக்கு மருத்துவரீதியாக உதவ உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் இரட்டை சகோதரிகளை அறுவை சிகிச்சை மூலம் பிரிப்பதில் சிரமம் இருப்பதாலும், அவர்களது பெற்றொர் அதனை விரும்பாததையும் சுட்டிக் காட்டியுள்ளனர். எனவே, அறுவை சிகிச்சை மூலம் இரட்டை சகோதரிகளை பிரிக்க உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் இரட்டை சகோதரிகளுக்கு மாதம் 5ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும், இரட்டை சகோதரிகளின் உடல் நிலையை மருத்துவக் குழு தொடர்ந்து கண்காணிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top