ஆந்திர திரையுலகில் அரசின் நந்தி விருதுகள் உயரிய விருதாக கருதப்படுகிறது. 2011-ம் ஆண்டுக்கான ஆந்திர அரசின் நந்தி விருதுகள் ஐதராபாத்தில் வழங்கப்பட்டன. ஆந்திர முதல்- மந்திரி கிரண்குமார் ரெட்டி, இந்தி நடிகர்
அமிதாப்பச்சன் ஆகியோர் பங்கேற்று விருதுகளை வழங்கினார்கள்.
சிறந்த நடிகைக்கான விருது நயன்தாராவுக்கு கிடைத்தது. ஸ்ரீராமராஜ்ஜியம் என்ற தெலுங்கு படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக இவ்விருது அவருக்கு கிடைத்தது.
சிறந்த நடிகருக்கான விருதை மகேஷ்பாபு பெற்றார். நாகார்ஜூனா, லட்சுமி மஞ்சு போன்றோரும் விருதுகள் பெற்றனர். அமிதாப்பச்சனுக்கு என்.டி.ஆர். நினைவு விருதை கிரண்குமார் ரெட்டி வழங்கினார்.
0 கருத்து:
கருத்துரையிடுக