புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


நல்ல கதை கிடைத்தால் தமிழில் நடிக்கத் தயார் என்று கூறிய ஸ்ரீதேவியிடம் எந்த ஹீரோவுடன் நடிக்க விரும்புகிறீர்கள் என்று கேட்டதற்கு சற்றும் யோசிக்காமல் அஜீத் குமார் என்றார்.


நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் நடிகை ஸ்ரீதேவி கலந்து கொண்டார்.

பிரகாஷ் ராஜ் நடத்தும் இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பு முடிந்த பிறகு கிளம்பிய ஸ்ரீதேவியிடம் தமிழ் ரசிகர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறுமாறு நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி குழுவினர் கேட்டுக் கொண்டனர்.

அதற்கு அவர் என்ன கூறினார் என்று பார்ப்போம்...

மும்பையில் செட்டிலான தன்னால் முன்பு போல் தமிழில் சரளமாக பேச முடியவில்லை என்றார் ஸ்ரீதேவி.

தமிழ் டிவி சேனல்களைப் பார்ப்பதால் தான் இன்னும் தமிழ் டச் விடாமல் இருக்கிறதாம் ஸ்ரீதேவிக்கு.

வடிவேலு, விவேக் காமெடி சீன்களைப் பார்க்கப் பிடிக்கும் என்றார் ஸ்ரீதேவி.

நல்ல கதை இருந்தால் மீண்டும் தமிழ் படங்களில் நடிப்பேன் என்ற ஸ்ரீதேவியிடம் எந்த ஹீரோவுடன் நடிக்க விரும்புகிறீர்கள் என்று கேட்டனர். அதற்கு அவர் சற்றும் யோசிக்காமல் அஜீத் குமார் என்றார். அஜீத்துடன் பணியாற்றுவது மகிச்சி என்று தெரிவித்துள்ளார்.

ஸ்ரீதேவி நடித்த இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் அஜீத் பணம் வாங்காமல் நடித்துக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அஜீத் ஒரு அருமையான மனிதர் என்று ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தெரிவித்திருந்தார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top